திரண்டு பெருகுது - கலித்தாழிசை

பூமியின் சுழற்சியால் தோன்றுது காற்று
காற்றினால் திரண்டு பெருகுது மேகம்
மேகக் குவியல்கள் குளிர்வால் மழையாம்
மழையின் தூறலால் முளைக்குது பயிர்கள்
பயிர்களே யாவைக்கும் நல்ல உணவாம்
உணவினால் வாழுது புவியில் உயிர்கள்
உயிர்களின் அறிவினால் ஆறு வகையாம்
வகையின் ஆறுக்கும் உயிர்தருவது புவியே
புவியை சிதைப்பதில் முதல்நிலை மனிதன்
மனிதனுக்கு புவியில் உள்ளபெயர் புனிதன்
புனிதன் செய்யும் செயலெல்லாம் கெடுதல்
கெடுதலால் அவனழிவது என்பது நியாயம்
பிறபல உயிர்களும் சேர்ந்தழிவது உலகின் நீதியா?
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (5-Mar-21, 7:14 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 30

மேலே