கடத்திச் சென்று மறைத்து
பலவந்தம் படுத்துமோ பெண்ணின கோழி மைனா கொக்குகளை
குரங்கு அணில் பல்லி தேவாங்கு இவைகளின் பெண்ணினத்தையும்
கும்பலாய் சென்றுக்கூடி இவைகள் புணரத்துணியுமோ
கள்ள உறவுக் கொண்டும் கொலை செய்ய முயலுமோ
களவாடிக் கொண்டு பணத்திற்காக கலகங்களிடுமோ
கடத்திச் சென்று மறைத்து விடுவிக்க பேரம் பேசுமோ
மாமியார் மருமகள் என இவைகள் சண்டையிடுமோ
அடிப்படை தேவைக்காக இணைந்து போராடுமோ
புனிதநாள் என்று குறித்து வைத்து விரதமிருக்குமோ
எதிர் காலங்குறித்து பிறப்பின் குறிப்பை ஆய்விடுமோ
மன உளைச்சல் மிகுந்து கூச்சலிட்டு தூக்கிடுமோ
மதிப்பாய் தெரிய அங்கத்தில் எதையேனும் பூட்டிடுமோ
சொத்துக்கள் இதுவென்று சொந்தம் கொள்ளுமோ
மனிதனின் மாய ஆசைகளை நினைக்காத இவைகள்
ஐந்தறிவு உயிர்களாம் யாவையும் சிதைக்கின்ற
கேடு நிறைந்த கீழ்நிலை மனிதனுக்கு ஆறறிவாம்.
----- நன்னாடன்.