இன்றைய பெண்

பெண்ணனவள் அடிமையாய் அடங்கி ஒடுங்கி
வீட்டிலேயே அடங்கி கிடந்த காலம்
போயே போச்சு . இன்றைய பெண்
நவீண மங்கை படிப்பிலும் வீரத்திலும்
ஏன் செய்யும் தொழிலும் தான்
ஆணிற்கு சரிசமமே என்று நினைக்கும்
வகையில் முன்னேறி இருக்கின்றாள் இன்று
நாட்டிலேயே முதல் பெண்'ட்ரக் டிரைவர்'
இன்று உருவெடுத்து வந்து விட்டாள்
இன்றைய பெண் விண்ணிலே ஆகாயக்கப்பல்
செலுத்தும் பைலட் .... இப்படி இவள்
ஆணுக்கு சமமாய் செய்யாத சாதனை
ஏதும் இல்லையே.... ஆனால் இன்றும்
ஒடிந்த ஆணின் இதயத்தை அன்பு
கலந்த காதல் தந்து அணைப்பவள்
பெண் ஒருவளே இல்லத்தில் தன்
குழந்தைகளையும் கணவனின் பெற்றோரையும்
அன்போடு பேணிவளர்பவள் பெண்ணே

மகளிர்க் குலம் பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (7-Mar-21, 2:27 pm)
Tanglish : indraiya pen
பார்வை : 1241

மேலே