சிலர் பேச்சும், எழுத்தும்
திக்கி திக்கி பேசும் பேச்சில்
இவன் தன்னையே நொந்துக் கொண்டிருந்தான்
பேசுவதைக் குறைத்துக் கொண்டு
கவிதை எழுத அவன் கவிதையில்
கம்பரசம் அடிதோறும் தேனாய்
சொட்டியது ... கம்பதாசன் ஆனான்
அன்று பள்ளியில் ஆங்கில ஆசிரியர்
சொன்னது நினைவுக்கு வந்தது
எழுத்தாளன் 'கோல்ட்ஸ்மித்
கிளிபிள்ளைபோல் பேசினாலும்
எழுத்திலோ தேவதை.....