அவனும் நானும்

அவனும் நானும்..
விண்ணும் மண்ணும் போல மழை எனும் மொழியால் பேசிடுவோம்..

அவனும் நானும்..
நீரும் நெருப்பும் போல அவன் அணைத்திடவே குளிர்திடுவேன்..

அவனும் நானும்..
துடிப்பும் இதயமும் போல அவனுடன் உள்ளவரை மட்டும் வாழ்ந்திடுவேன்..

அவனும் நானும்..
உயிர், மெய் எழுத்துகள் போல உயிர் அவனின்றி மெய் நான் அர்த்தமற்றவள்..

அவனும் நானும்..
மேல் இமையும் கீழ் இமையும் போல பிரிவுகள் ஒற்றை நிமிடம் கூட நீடிக்காது..

அவனும் நானும்..
காற்றும் குழலின் இசையும் போல அவனால் தான் இசை நான்..

அவனும் நானும்..
கற்பனையும் கவியும் போல கற்பனை அவனின்றி கவி நான் தோன்றேன்..

அவனும் நானும்..
மேகமும் வானும் போல மேகமான அவன் காதல் இல்லாமல் வான் நான் வெறுமையாவேன்..

அவனும் நானும்..
முடிவும் தொடக்கமும் போல அவனில்லாமல் முழுமை பெற மாட்டேன்..

மொத்தமாய் அவனும் நானும் அர்த்தங்கள் நிறைந்த நாமாய் மாறும் வேளைக்காய் காத்திருக்கும் நான்...

எழுதியவர் : கண்ணணின் மீரா (7-Mar-21, 10:39 pm)
சேர்த்தது : கண்ணனின் மீரா
Tanglish : avanum naanum
பார்வை : 119

மேலே