இயற்கை

காயும் பழமுமாய் காத்திருக்கும் பெரிய
பயனுள்ள புளியமரம் சாலை ஓரத்தில்
அங்கம் போன்ற அதன் கிளைகளை
வெட்டிக் கொண்டிருக்கிறான் ஒருவன்...
சிறிது நேரம் கழித்து அவனே
பெரிய அந்த மரத்தின் நிழலில்
இளைப்பாற படுத்துறங்க....அதோ இன்னொருவன்
வெய்யலில் காய்கிறதோ மரம் என்றெண்ணி
மரத்திற்கு நீர்ப் பாய்ச்சிவிட்டு போகின்றான்

புளிய மரம் பாரபட்சம் பார்க்காது
தன் கிளைகளை வெட்டியவனுக்கும் நிழல்
தந்தது தண்ணீர் இறைத்தவனுக்கும் அவன்
எடுத்துச் செல்ல பலமும் காயும் தந்தது

நமக்கு பாடம் சொல்லித்தரும் அஃறிணைகள் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Mar-21, 2:58 pm)
Tanglish : iyarkai
பார்வை : 335

மேலே