பூமியே அதற்கு பெண்மகள் - இணைக்குறள் ஆசிரியப்பா

அந்தரத்தில் வட்டமெனத் தொங்குது பார்
அகன்றதோர் கதிர் விளக்கு
அழகாக செய்தது எவரோ
எரியவிட்டு சென்றது எவரோ
திரியென ஏதுவும் இல்லையே
திரவ எண்ணெயும் இல்லையே
தினசரி எரிவதைப் பார்த்தோம்
திடமாக இருப்பதைப் பார்த்தோம்
நெருப்பாய் இருந்தபடி நவகோளை
சுழற்றுதே நிலைத்த நிலையில்
பூமியே அதற்கு பெண்மகள்
உயிர்களோ பிறந்தது புவியில் அதனாலே.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (12-Mar-21, 6:49 am)
பார்வை : 324

மேலே