காதலுக்கு முன் காமு காதலுக்கு பின் காபி
' காதலித்த போது கண்ட இன்பம்
காதலுக்கு பின் வாழும் நாட்களில்
காணக் கிடைக்க வில்லையே' என்றான்
அதற்கவள் ' எது காதல் என்று நீயறியவில்லை
அதுவே காரணம்' என்றால், மேலும்
என்னைப் பொறுத்தவரை இந்த ' கா.பி'
நாட்களே சுவைத்தரும் நாட்கள் என்றாள்
அதற்கு அவன் எப்படி என்றான்' இதோ
இதோ இந்த பிள்ளைக்கு கனியமுதைப்
பேணி வளர்க்கும் ஈடுபாடு ஒன்றே
போதுமே என்றாள் ..... அவன் வாயடைத்துப்போக