துணிவே துணை

துணிவே துணையெனக் கொள்ளு –அதன்
துணையுடன் துயரினை வெல்லு
பணிவே பலமென எண்ணு –உன்
புகழும் உயர்ந்திடும் விண்ணு...

பேயென எண்ணி அஞ்சும் –ஒரு
பேதமை ஒழிக்கணும் நெஞ்சும்
நோயென வாகும் கோபம் –அதை
நெஞ்சில் கொண்டிடல் பாவம்.

அறத்தின் நல்வழி வாழு –அதை
அனுதினம் வாழ்வில் பழகு
உறவுடன் ஒற்றுமை பேணு –அது
உரமாம் என்பதைக் காணு....

நேர்மை வழியினில் செல்லு –வரும்
வெற்றியை பெருமையாய் கொள்ளு
பார்வையில் இருக்கணும் பாசம் –அதில்
புதையணும் என்றுமே நாசம்.

கொடியவர் தன்னை அழிக்கும் –அந்த
கொள்கை கொண்டால் செழிக்கும்
துடித்திடும் உணர்வுடன் நில்லு –அதில்
தோல்வி இலையென சொல்லு...

அன்பே கடவுள் ஆகும் –அதில்
அதர்மம் தொலைந்து சாகும்
நன்றே செய்து வாழ்ந்தால் –அது
என்றும் துணையாய் நிற்கும்......

எழுதியவர் : பொதகை மு.செல்வராசன் (24-Mar-21, 8:21 pm)
Tanglish : thunive thunai
பார்வை : 75

மேலே