வசீகர குரல்
அழகிய குரலொன்று
ஓலித்ததடா!!!
ஆலமரமாய் அடியிரங்கி வேர் இட்டதடா!!!
எதுகையினை உச்சரிக்கும் போது
வேர்வை துளிகள் உடல் முழுவதும் முத்தமிட!!
மோனையினை கொஞ்சம் முனுமுனுக்கும் போது என் மொத்த உயிரும் அதனுள்ளேயே மூழ்கி தத்தளிக்குதடா!!!
முழுமையான உன் வசிகர குரலுக்கு ஏங்கி கால்கள் பரிதவிக்குதடா!!!!!!
மெல்லினத்தை மெல்லியதாய் நீ அசை பாட!!!
வல்லினமோ வரிந்து கட்டிக்கொண்டு வந்ததடி வெளிவரும் வார்த்தையினுள் கைகோர்க்க!!!
எதிர்மறை சொற்களோ ஏமாற்றமில்லாமல்
ஏறுவகையாக சுதியினுள் பரிமாற வந்ததடி !!!!
நீதி கேட்டு நிற்குதடி
நீக்கிய வார்த்தைகள் யாவும் உந்தன் வாயிற்படி அருகே!!!
உன் பார்வையை பார்ப்போர்க்கு எல்லாம் பரவசம் பூத்திட!!!
எனக்கோ உன் ஒலி அலைகளை கடக்கும் போது காது மடல்கள் பழரசம் அருந்திட!!!!
அழகியல்
ஏணோ உன்னோடு மட்டும் போட்டியிட்டு
போதையினில் தள்ளாடுகிறது!!!!
எம் மனமோ
போதாமையினில் இன்னமும்
திண்டாடுகிறது!!!
பொதுவாய் உச்சரித்து கொண்டு இருக்கிறது
நீ
பாடிய பாடல்களை மட்டும் சத்தமில்லாமல்!!!!!!