அவள்
தொட்டால் நீமணக்கின்றாய் சந்தனம்போல்
எட்டாது இருந்தது ஏனென்று என்மனதிற்கு
இப்போது புரிந்தது நீயே சந்தன
மரத்தைக் கடைந்தெடுத்த சிலைபோல்
அல்லவா இருக்கின்றாய் என்னவளே