மண்
மண்
🌑🌑🌑🌑🌑🌑🌑
வான் வழங்கும் பெருமழைகள் --வையத்தில்
வீழ்ந்துறங்கும் சில நொடியில்..
பெய் மழையை நீ எடுத்து
செய்கின்றாய் பல விந்தை...
மண்ணே...
தீமை எண்ணா உன் எண்ணம்
திக்கரிதானே என்றென்றும்
கோடி உயிர்க்கு உணவழித்தும்
கொட்டிக் கிடக்குது உன் தழைவு
தவனன் பசிக்கும் மண்மீது
தரமாய் உணவை தரமுடியும்
மவுனத்தை கலைத்து மடியமர்ந்தால்
மண்தாய் பொசிப்பால் பசியாறும்
நங்கே உன்னை பேசிடினும்
அங்கும் அவனுக்கும் உணவழிப்பாய்
எல்லம் வளர்த்தே புவிஉயிர்க்கு
எத்தனை மருத்துவம் பார்க்கின்றாய்
முகரிமை மிக்க புவிமண்ணே
முடிவது எப்படி உன்னாலே
காஞ்சு போன புல் எடுத்தும்
தீஞ்சாறு வழங்கும் வித்தகியே
சினத்தைக் காட்ட சிவன்கூட
சிரந்தை எடுப்பான் பலநேரம்
மிண்டையில் உன்னைத் தாக்கிடினும்
சண்டையை மறந்தும் உணவழிப்பாய்
கதலியில் தோன்றும் கதலியாய்
கருவுற்று நீயும் அண்டத்தில்
மற்றொரு புவியை ஈன்றிடனும்
மனிதனும் அதுகண்டு வாய்பிளந்து
இந்தம் பிடித்த குரங்காக
இன்னொரு புவிக்கும் தாவிடனும்......
😁😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😬