பௌர்ணமி நிலவு
இரவெனும் நந்தவனத்தில்
பூத்த ஒளிவீசும்
அதிசய பூவே
விண்ணெனும் வாசலில்
கதிரவன் ஏற்றி
சென்ற தீபமே
வட்டமுகம் வரைந்த
ஓவியன் மிச்சமும் வரைய
அச்சம்கொண்ட ஓவியமே
அப்பூவே கறையாய்
தீபத்தில் கரைந்து
ஓவியத்தில் கலந்து
பௌர்ணமி நிலவானதோ?!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
