மறுக்காமல் வருகின்றார்

தேர்பவனியில்
வடம் பிரித்தவாறு
கோஷமிடுகிறார்கள்
கோவிந்த
கோவிந்தாவென்று
ராமானும்
ரஹீமும்
ராபர்டும்
இழுக்கும் திசையிலேயே
வருகின்றார்
மறுப்பேதும் சொல்லாது
திருமால் !

எழுதியவர் : விஜயகுமார்.துரை (28-Mar-21, 3:49 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 53

மேலே