அவள்

உன்னழகை ரசித்து அதைக் கவிதைக்குள்
அப்படியே அடைந்திட பார்க்கும் கவிஞன்நான்
நீயும் நானும் இளமைகுன்றி வாடினாலும்
எந்தன் கவிதை குன்றா உன்னழகை
காட்டி நமக்கு தெம்பூட்டும் அதனால்
என்றும் கவிதையடி எந்தன் நீ
காதலன் நான் உந்தன் கவிஞன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (30-Mar-21, 7:53 pm)
Tanglish : aval
பார்வை : 257

மேலே