தகுதி

நீட் படித்தால் தான் மருத்துவர்

தகுதி தேர்வு எழுதினால் தான் ஆசிரியர்

ஒரு அரசு வேலைக்கே
ஆயிரத்தெட்டு கல்வி தகுதியும்
தகுதி தேர்வும்

இந்த லட்சனத்தில்
அடிப்படை கல்வி தகுதி இல்லாதவர்களே
பெரும்பாலும் அரசியல் வாதிகளாகிறார்கள்

படிக்காதவர்கள் எல்லாம்
மேதைகள் மட்டும் அல்ல
முட்டாள்களும் தான்

பெரும்பாலும்
முட்டாள்களையே
நம் தொகுதிக்கான பிரதிநிதியாய்
தேர்ந்தெடுக்கும்
மெத்த படித்த அறிவு ஜீவிகள் நாம்

தேர்தல் களம் கவிதை தொகுப்பில் இருந்து

எழுதியவர் : ந.சத்யா (31-Mar-21, 7:17 am)
சேர்த்தது : சத்யா
Tanglish : thaguthi
பார்வை : 158

மேலே