அரசியல் சதுரங்கம்
அரசியல் சதுரங்கத்தில்
வெறும் பொம்மைகளாய் நாம்
கருப்பு காய்கள் என்றும்
வெள்ளை காய்கள் என்றும்
நம்மை ஜாதியாலும்
மதத்தாலும் பிரித்து வைத்து
நம்மை வைத்து
நம்மையே வெட்டி வெட்டி
ஆனந்தம் கொள்கிறான் அரசியல் வாதி
ராஜா, ராணி, மந்திரி, சிப்பாய்கள்
என நாம் மார்தட்டி கொண்டாலும்
வெறும் பொம்மைகளாகவே
வெட்ட படுகிறோம் நாம்
பார்வதீஷ்வரரின் தேர்தல் களம் கவிதை தொகுப்பில் இருந்து