கொவ்வை இதழாள் பூப்பறிக்க வந்தாள்

கொடியில் குவிந்து கிடந்தது
ஒரு மலர்மொட்டு
கொவ்வை இதழாள்
பூப்பறிக்க வந்தாள்
அவ்வை வெண்பா போல்
புன்னகை புரிந்திட
செவ்வனே கற்ற பாடத்தில்
மெல்ல மெல்ல இதழ் விரித்தது
மலர் மொட்டு !

செவ்வாய் மலரொன்று கொடியில் குவிந்திருந்தது மொட்டாய்
கொவ்வை இதழாள் ஒருத்தி பூப்பறிக்க வந்தாள்
அவ்வை வெண்பாபோல் முத்தாய் புன்னகை புரிந்திட
செவ்வனே கற்றபாடத்தில் மெல்லஇதழ் விரிந்தது மலர்மொட்டு !

----இயல்பான வரிகள் ஒரே அடியெதுகையுடன் ஐஞ்சீர்
நெடியிலடியில் யாப்பில் நடக்கிறது கவிதை

செவ்வாய் மலர்கொடியில் மொட்டாய் குவிந்திருக்க
கொவ்வை இதழினள் பூப்பறிக்க வந்தனள்
அவ்வையின் வெண்பாபோல் மெல்லச் சிரித்தனள்
செவ்வனேமெல் லத்திறக்கும் மொட்டு !

---இயல்பான வரிகளில் நடந்த இந்த இயற்கைக் கவிதை இப்போது
இன்னொரு யாப்புவழியில் நடக்கிறது . குறிப்பு மூன்றாம் அடியில்
அவ்வையின் கையில் .நீங்கள் அறிவீர்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Apr-21, 9:57 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 49

மேலே