எனக்கு ஆயுளை நீட்டுமடி
தெய்வம் உனக்குள் புகுந்து
தீபம் ஏற்றியதால் உன்னின்
நிறம் தங்கமாய் மின்னிட
சுவாலை பட்டதால் முடிகள்
கருமையாய் கார்மேகம் போன்றே
வார்ப்பில் உருக்கிய சிலையாய்
பளிங்காய் பளிச்சென முகமும்
செதுக்கிய புருவங்கள் ஓவியத்து
கண்களும் மூக்கும் உதடும்
கழுத்தோ செவ்வாழை மரத்துண்டாய்
தோள்கள் அழகிய சிலையென
கைகள் யானைத் தந்தபோல்
அழகிய தேவதையே நீயோ
அகிலம் வியக்கும் பிறவியடி - உன்
அருகாமையே எனக்கு ஆயுளை நீட்டுமடி.
----- நன்னாடன்.