தமிழ் இருக்கும்
கலி விருத்தம்
தமிழும் நின்றிடும் நம்நடு வென்றுமே
தமிழி னைத்தின மும்திருத் தென்பனே
தமிழர் தம்மர பைதினம் கொன்றிடும்
தமிழென் பாரிருப் பான்சதம் என்றுமே
இதைத்தான் பாரதி தமிழினி மெல்ல மெல்ல
சாகுமென்றான். தமிழர் மொழிக் கலாச்சாரம்
மரபுக் கலாச்சாரம் மதக் கலாச்சாரம் இனக்
கலாச்சாரம் தொழில் மற்றும் சமய நடை யுடை
கலாச்சார மழித்து விட்டு , தமிழரின் மொழியை
எந்த மதத்தாரும் , இனத்தினை சமயத்தினை
பின் பற்றுவனுக்கெல்லாம் தமிழைத் தாரை
வார்த்து நின்ற தமிழ் செத்த பிணமே.
தமிழர் என்றோர் இனமுண்டு தனியே
அவர்க்கோர் குணமுண்டு. மறவாதீர்.