அன்னையர் தினம்
அன்னையர் தினம்
அம்மா என்னும் அழகு பெட்டகம்
ஆசையோடு அணைக்க ஆவல் பெருகிடும்
இன்முகம் காட்டிடும் இனிய பொக்கிஷம்
ஈசனை உயிருடன் காண ஒரு உருவகம்
உணர்வுடன் ஒன்றிய உயர்ந்த ஓவியம்
ஊக்கத்தோடு நம்மை உயரவைக்கும் காவியம்
எதிர்பார்ப்பு இல்லாது இயங்கும் தனிமரம்
ஏமாற்றங்களை தாங்கும் உன்னத இதயம்
ஒவ்வொரு நாளும் நாம் பாடும் புதுராகம்
ஓய்வின்றி செயல்படும் சிறந்த படிப்பகம்
சத்தமின்றி மனதில் ஒலிக்கும் மெல்லிய கீதம்
பூரணமான அன்னையின் அன்பை
இந்நன்னாளில் வணங்கி வாழ்த்துவோம்