கண்ணூஞ்சல் ஆடினாள் காஞ்சனமாலை

கண்ணூஞ்சல் ஆடினாள் காஞ்சனமாலை
*******
அண்ணலாம் இராமனுடன் ஆரணங்கு சீதையவள்
சொண்ணத்து ஊஞ்சலில் ஆடுமக் காட்சி தனை
விண்ணவரும் மன்னவரும் கண்குளிரக் காண
நான்மறைகள் ஓதநல் கீதங்கள் பரவியதே


மாணிக்கக் கல்பதித்த பொன்னிற ஊஞ்சலில்
தன்னவன் இராமனுடன் மைதிலி யவளாட
விண்ணொளிர் இருவரோடு தேவரின மன்ன
வரும்
கண்ணாரக் கண்டு திகைத்தே நின்றனரே

துந்துபி முழங்க காந்தர்வர் இசையியக்க
அந்தரத்தார் ரம்பையுடன் சீர்நடம் ஆட
வந்தமர்ந்த மன்மதனோ ரதியோடு தலை
குனிய
வந்தவர் கைகள் சுகந்த மலர்தூவ

கண்ணூஞ்சல் ஆடினாள் காஞ்சனமாலை
கண்தஞ்சம் அடைந்த பொன்னூஞ்சல்
இதுவன்றோ!

லாலி லாலி லாலி லாலி

எழுதியவர் : சக்கரை வாசன் (9-May-21, 6:48 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 20

மேலே