அவரு எங்க தாத்தா

தாத்தா தாத்தா
தாடி வளர்த்து
தலை நரைத்த
எங்க தங்க தாத்தா

நீ தள்ளாடி தள்ளாடியே
தலை குனிந்து வந்து
தடிக்கி விழ பார்ப்பதும் ஏன்
எங்க கிழட்டுத் தாத்தா

தொல தொலா
சட்டையைப்போடும்
ஓட்டக்கண்ணாடி தாத்தா
தொன தொனன்னு பேசி
ஓயாமா இருமுவதும்
ஏன் தாத்தா

ஒருபக்க பேப்பர
ஓருமணிநேரம் வாசிப்பார் எங்க தாத்தா
ஒருத்தரையும் காச்சாமல் விடமாட்டார்
ஒத்தக்காது அடைத்துப்போன
எங்க ஒல்லி தாத்தா

ஓகோன்னு எதையாவதை கேட்டு புட்டு
ஒன்னுக்கு ஒன்னு முன்னுக்குப் பின்னாக பேசுவார்
எங்க செவுட்டுக்காது தாத்தா

கண்ணுக்கு கண்ணாடி போட்ட தாத்தா
கண்ணு இரண்டும் இருண்டு போனாலும்
கம்பீரமா சிரிப்பார் எங்க தாத்தா

உதவுவதாக நினைத்து
ஒத்தைக்கு இரட்ட வேலையை இழுத்து வைப்பார்
எங்க ஊம குசும்பு தாத்தா

வலைந்தே கூனு விழுந்து
வயது முதிர்ந்த எங்க தாத்தா
நீ விளையாட வந்தால்
பொழுது போது தெரியாது தாத்தா

சிரிப்பதற்கு சீனி மிட்டாய் வாங்கித்தரும்
செல்ல தாத்தா
சிரிக் சிரிக்க வச்சி
சிந்திக்க ஆயிரம் கதைகள் கூறுவார்
தங்க தாத்தா

பட படன்னு பேசும் எங்க
பட்டு தாத்தா
உன் பரட்ட தலைக்கு
பஞ்சி மெத்தை வைத்தது யாரு தாத்தா

குனிஞ்சி குனிஞ்சி நடக்கும் கோணல் தாத்தா
நீ கோபிக்காம ஒரு
தடிய வச்சி நடந்து வந்தால்
தடுமாற்றம் போகும் தாத்தா

நடு நடுங்கி நாட்டியம் ஆடும்
நல்ல தாத்தா
உன்
நடமாட்டம் தான் என்ன ஆச்சி
சொல்லு தாத்தா

பொல பொலன்னு சிரிக்கும்
பொக்க வாயி தாத்தா
நீ பொழுது போகாம
லொட லொடன்னு பேசியே
கொல்லுவதுவும் ஏன் தாத்தா

கொழ கொழன்னு பேசும்
கொல்லுதாத்தா
நீயும்
தொன தொனன்னு
பேசியே சண்டை போட்டு
வேடிக்கைக் காட்டும்
வெள்ளை மனசு தாத்தா

நீ வீம்பு விதன்டா வாதம் பிடிக்காமல்
விரு விருன்னு ஒரு வாயி
சோற உண்ணுதாத்தா


தலைமுறைகள் பார்த்த எங்க தாத்தா
தயங்கி தயங்கி நடந்தாலும்
எங்களைத் தாங்கிடுவார்
எங்க தாத்தா
தூக்கம் வரவில்லையென்றால்
தூக்கி மடியில் வைத்து
தட்டி தளாட்டுப் பாடல்கள் பாடி
தூங்க வைப்பார்
எங்க தாத்தா
அவருக்கு தூக்கம் வரவில்லையென்றால்
பிறரை தூங்விட மாட்டார்
எங்க துடுக்கான தாத்தா

சும்மா இருக்காமட்டார்
எங்க சோம்பேரித்தாத்தா
சுற்றி சுற்றி நாங்கள் விளையாட
கப்பல் கட்டைவண்டி நொங்கு வண்டிச் சக்கரமும்
காத்தாடியும் செய்து தருவார்
எங்கள் தாத்தா

சுகம் இல்லாம படுத்து விட்டால்
சுக்கு காப்பி என்று
பாட்டி வைத்தியம் தான்
பக்குவமாக பார்த்திடுவார்
எங்க தாத்தா

படி படின்னு சொல்ல மாட்டார்
எங்க தாத்தா
பட்டிணியாக படுக்க விடமாட்டார்
எங்க தாத்தா
படுக்குமுன்னே
பல்துலக்க சொல்லித்தருவார்
எங்க தாத்தா
பழக்க வழக்கங்களைச்
சொல்லித்தருவார்
எங்க பாசமுள்ள தாத்தா

பல்லில்லாமல் சிரித்தே
பயமுறுத்துவார்
எங்க பொக்கவாய் தாத்தா


உழைத்து உழைத்து
ஓடாய் தேய்ந்து போனவரு
எங்க உழைப்பாலித் தாத்தா
உண்மை எது
பொய் எதுன்னு சொல்லித்தருவாரு
எங்க தாத்தா

வேட்டிய வச்சே
வேர்வையை துடைத்து விடுவார்
எங்க தாத்தா
வேடிக்கை காட்டி
கூட்டாக விளையாடுவார்
எங்க தாத்தா

வேஷம் போட்டு வேடிக்கை காட்டுவார்
எங்க தாத்தா
கொஞ்சி கொஞ்சி பேசுவார்
எங்க தாத்தா
கோபம் வந்தாலும்
கொல்லுன்று சிரிக்க வைப்பார்
எங்க தாத்தா

அம்மா அடிக்க வந்தால்
தடுத்து நிறுத்தி அன்பு மழையில்
நனைய வைப்பார்
எங்க ஆசை தாத்தா

ஆபிசுக்கு அம்மா அப்பா போனபின்பே
அன்பாய் சேவகிப்பார்
எங்க செல்ல தாத்தா

பல்லு செட்டு கட்டியவரு
எங்க தாத்தா
பல்லு இல்லாட்டியும்
பட்சணம்தான் திங்கத் துடிக்கிறாரு
எங்க பறக்காவெட்டி தாத்தா

பழமை புதுமை என்று
பஞ்சாங்கம் பேசினாலும்
பண்பாடு கலாச்சாரத்தை
சொல்லித்தருவார் எங்க தாத்தா

ஊருக்கெல்லாம் உபதேசம் செய்தாலும்
ஒரு
ஊசி குத்த பயப்படுவார்
எங்க பயந்தாங்கோலி தாத்தா

ஊமையா இருக்கும் தாத்தா பாட்டிகளை
ஊருக்கு வெளியே உள்ள
காப்பகத்தில் அனுப்பி
எங்களை ஒதுக்கி வைக்ப்பார்கிறாங்க
இந்த முட்டாள் அம்மா அப்பாக்கள்

முதுமைறியல் தடுமாறப்போறவங்க
இவங்களும் தான் என்பதைஉணராது
தலைகால் தெரியாது ஆடுறாங்க
இந்த அம்மா அப்பாக்கள்

அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (9-May-21, 11:24 am)
Tanglish : AVARU thaathaa
பார்வை : 46

மேலே