சிட்டுக்குருவி
கையளவு சிட்டுக்குருவி
கூட சிறகடித்து பறந்து
சிகரம் தொட துடிக்கிறதே
கடலளவு கனவுகளை வைத்திருக்கும் நீ
கடுகளவும் முயற்சியின்றி இருக்கலாமோ?
முயற்சி என்பது விதை
அதை நீ விதை
உழைப்பை உரமாக இடு
முளைக்கட்டும் விருட்சமாக
கனவுகள் நனவாகட்டும்....
ஜோதி மோகன்