கடவுள்

கடவுள்
காலை சுமார் ஏழு மணி இருக்கும். பேப்பர் படித்து கொண்டு இருந்தேன்.
அழைப்பு மணி ஒலிக்க,கதவை திறந்து
பார்க்க,ஒரு அறிமுகமான நபர் உள்ளே வரலாமா என்று கேட்க,உள்ளே அழைத்தேன். அமர சொன்னேன்.
அவரை பார்த்து,உங்களை எங்கோ பார்த்த ஞாபகம்,நினைவிற்கு வரவில்லை என்றேன்.
உடனே அவர்,நான் தான் கடவுள்,இங்கு ஐந்து நிமிடம் இருப்பேன்.என்னிடம் மூன்று வரம் கேட்கலாம்,சீக்கிரம் என்றார்.ஒன்றும் புரியாமல் யோசித்த போது,இன்னும் நான்கு நிமிடம் பாக்கி என்றார்.உடனே நான்,மூன்று வரம் கேட்டேன்
1)இறந்து போன என் அப்பா,அம்மா,என்னுடன் வந்து வசிக்க வேண்டும்.
2)அடுத்த ஜென்மம் இருந்தால் எனக்கு மனைவியாக வருபவர் முகம் காண வேண்டும் என்றேன்.
3)அடுத்த ஜென்மத்தில்,நான் அதிகம் பாசம் கொள்ள நினைக்கும் நபரை காண வேண்டும் என்றேன்.
அவர் சற்றும் தயங்காமல்,என் மனைவியை அழைத்தார்,இவர் தான் நீங்கள் கேட்ட மூன்று வரம்,என்று சொல்லி விட்டு மறைந்து விட்டார்.
ஒரு வேளை உங்கள் முன் தோன்றினால்
எந்த மாதிரி வரம் கேட்பீர்கள் என்று சொல்ல முடியுமா.

எழுதியவர் : லோகநாதன் (15-May-21, 1:43 pm)
சேர்த்தது : LOKANATHAN
Tanglish : kadavul
பார்வை : 92

மேலே