கதவு

கதவு.
கதவு எதற்கு
.உள்ளே வரவும்,வெளியே போகவும்,

வீட்டு கதவு,
மன கதவு
அறிவு கதவு
என்று,பல கதவுகள் நம் வாழ்க்கையில்
உண்டு.இந்த கதவுகள் எப்போது திறக்கும்,எப்போது மூடும் என்று யாருக்கும் தெரியாது.
குடித்து விட்டு வந்தால் வீட்டு கதவு திறக்காது.
விருப்பம் இல்லா விட்டால் மன கதவுதிறக்காது.
புத்திசாலி தனம் இல்லா விட்டால் அறிவு
கதவு திறக்காது.
பணத்தை பார்த்தால் கஜானா கதவு திறக்கும்.
புண்ணியம் சேர்த்தால் சொர்க்கத்தின்
கதவு திறக்கும்.
அடுத்தவருக்கு கெடுதல் செய்யும் போது
நரகத்தின் கதவு திறக்கும்.
பெற்றோரை கவனிக்க தவறும் போது
முதியோர் இல்லத்தில் கதவு திறக்கிறது.
கல்வி மீது ஆர்வம்,பள்ளியின் கதவு திறக்கும்.
குற்றம் புரியும் போது சிறைச்சாலை கதவு திறக்கும்.

அத்தனை கதவு திறப்பதும்,மூடுவதும்
நம் செய்கையில்,நம் எண்ணத்தில்,
நாம் எடுக்கும் முடிவில்.
சரியான முடிவு எடுத்து,சரியான கதவை திறப்போம்.

எழுதியவர் : லோகநாதன் (15-May-21, 1:46 pm)
சேர்த்தது : LOKANATHAN
Tanglish : kadhavu
பார்வை : 107

மேலே