பெரிய மனிஷியாகிட்டா...
❓❓❓❓❓❓❓❓❓❓❓
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
❓❓❓❓❓❓❓❓❓❓❓
"வயல்வெளியெல்லாம்
சுற்றி வந்த எனக்கு
இனி
வாசலைக் கூட
தாண்டக் கூடாது" என்று
கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டது ....
ஆண் பெண் என்ற
பேதமில்லாமல்
பேசி
பழகி வந்த எனக்கு....
இனி
பெண்களுடன் மட்டுமே
பேசி பழக வேண்டும் என்று
அதிரடியாக
கட்டளையிடப்பட்டது...
எங்கு வேண்டுமானாலும்
துணிவுடன்
தனிமையில்
சென்று வந்த எனக்கு
இனி
தண்ணீர் குழாயடிக்கூட
தம்பியோடு தான்
செல்ல வேண்டும் என்று
சட்டம் போடப்பட்டது.....
ஆசிரியர்
கேள்விக்கு மட்டுமே
பதில் சொல்லும் நான்...
இனி
பள்ளியை விட்டு
ஐந்து நிமிட
நேரம் கழித்து சென்றாலும் வீட்டிலுள்ளவர்கள்
கேட்கும் ஆயிரத்தெட்டுக்
கேள்விக்கும்
பதில் சொல்ல
வேண்டியதாயிற்று.......
இதற்கான
காரணத்தை
அறிந்து கொள்ள
அடம் பிடித்து
அம்மாவிடம் கேட்டேன்.....
அம்மா சொன்னாள்
அடியே !
"நீ பெரிய மனுஷி "
ஆகிவிட்டாய் என்று
நான் கேட்டேன் ....
அம்மா
அண்ணன்
என்னை விட
"பெரிய மனுஷன்" தானே
அவனுக்கு
ஏன்னம்மா
எனக்கு போட்ட
சட்டம் கட்டுப்பாடு கட்டளை அவனுக்கு போடவில்லை....?
*கவிதை ரசிகன்*
❓❓❓❓❓❓❓❓❓❓