கன்னல் போன்றவள் கனிந்தநற் குணத்தினள் - கலித்துறை
1 .குற்றெழுத்தையோ ஒற்றெழுத்தையோ இறுதியாக உடைய மாச்சீரொடு கூவிளச்சீரும், அடுத்து இரண்டு விளச்சீரும் இறுதியில் ஒரு மாச்சீரும் புணர வரும் ஐஞ்சீரடி நான்காகி அமைந்த
கலித்துறை
(மா கூவிளம் விளம் விளம் மா)
கன்னல் போன்றவள் கனிந்தநற் குணத்தினள் கானில்
மின்னல் தோன்றிட மேனியின் சிலிர்ப்பவள் மென்மைப்
பின்னல் தோளினள் பேரிளந் தன்மையள் பேதை
அன்னம் சாயலாள் அன்பதன் இலக்கணம் அவளே! 1 – வ.க.கன்னியப்பன்
கலித்துறை
(மா கூவிளம் விளம் விளம் மா)
காலைத் தென்றலாய்க் களித்திடும் வேளையில் காதற்
சேலைப் போன்றதோர் செழித்திடும் கண்களில் செங்கை
வேலைப் போன்றகூர் விழியினைக் கொண்டவள் விண்டு
நூலைக் கற்றிட நுவன்றனள் நேரினிற் நோக்கி. 2 – வ.க.கன்னியப்பன்