கன்னங் குழியக் கனவில் கன்னிவந்தாள் - கட்டளைக் கலித்துறை
கட்டளைக் கலித்துறை
கன்னங் குழியக் கனவில் இனிதெனக் கன்னிவந்தாள்;
மின்னும் இடையினள் மின்னியே வந்தெனை மீட்டுகின்றாள்!
கன்னி யவளைக் களிப்பினிற் கண்டேன் கனிவுதன்னை
இன்னுமென் சொல்வேன் இனித்த வனப்பினை இன்பமென்றே!
- வ.க.கன்னியப்பன்