பெண்ணின் காதல் வர்ணனை

சட்டை அணிந்த சந்திரனே
சண்டை இட்டு உனை பார்க்க
சத்தம் இடுமே மேகங்கள்

பனியில் விழுந்த பகலவனே
பருவம் கனிந்த உனை பார்க்க
பாய்ந்து வருமே பறவைகள்

அத்து மீரும் உன் அழகை
அள்ளிக் கொண்டு சென்றுவிட
அக்கம் பக்கம் இடி இடிக்கும்

மீசை வைத்த மின் நிலவே
மிடுக்கான உன் நடைக்கு
மின்னல் வெட்டும் வானத்தில்

மையல் விழி நாயகனே
மழை தருமே உனை பார்க்க
மத்தியான வெயிலும் கூட

தாடி வைத்த தாமரையே
தள்ளி நின்று உனை ரசிக்க
தண்ணீர் வருமே வைகையிலே.

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (23-May-21, 9:53 am)
பார்வை : 558

மேலே