ஒவ்வொரு பூவிலும் நீ சிரிக்கிறாய்

புத்தகத்தை திருப்பினால்
புன்னகையுடன் அதில் நிற்கிறாய்
பூக்களை ரசித்து நின்றால்
ஒவ்வொரு பூவிலும் நீ சிரிக்கிறாய்
மாலையில் தனிமையில் நடந்தால்
தென்றலாய் தோளினைத் தழுவுகிறாய்
மௌனமாய் ஓரிடத்தில் பேசாமல் அமர்ந்தால்
மனதெல்லாம் குலுங்கிச் சிரிக்கிறாய் டீஸ் செய்கிறாய்
ஒருபொழுதேனும் ஒருசிறிதேனும் ஓய்வுகொடடி
போட்டித் தேர்வுக்கு நான் தயார் செய்ய வேண்டும் !

நீலமான நீளமான நதி நைல் ...
போச்சுடா ......
மீண்டும் நைல் நதிக்கரையில் வந்து
சிரிக்க ஆரம்பித்து விட்டாயா ?
வேலை கிடைச்ச மாதிரிதான் jQuery17109603353250142097_1621916657539??!!!

தோட்டத்தில் உங்கப்பனை ஒரு வேலைபோட்டுத் தரச்சொல்
தோட்டக்காரனும் வீட்டுக்காரனுமாய் டபுள் டூட்டி செய்கிறேன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-May-21, 9:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே