கணிப்பொறி தமிழின் யுனிகோடு நிபுணன் தகடூர் கோபி காலனோடு சென்றார்

கலி விருத்தப் பா

இளந்தமிழை இணையத்தில் ஏற்றிட அரும்பாடு
இளைஞர் மனதிலே சிம்மாசனம் இட்டே
இளையில் இருந்த செந்தமிழ் வார்த்தைகளை
இளக்கி இணையத்தில் பதிவிட்ட முதற்றமிழன் --- 1

கணவாயுள்ள தருமபுரியின் குமாரசாமிப் பேட்டையின்
தணிகாச லனாரின் மகனானதக டூர்கோபியும்
தணியாத ஆவலில் கணிப்பொறியில் பணியாற்றி
கணிதத்தமிழை கணினியின் மென்பொருளாய் ஆக்கினான் --- 2

உலாவரும் வகையில் தமிழையும் உலகரங்கில்
நிலாபோல் வலம்வர தமிழுக்கு யுனிகோடு
விலாவரியாக உருவாக்கிய தகடூரின் தமிழ்மன்னன்
தலைசாய்ந்து மாரடைப்பால் இன்று மாண்டான். ---3

வருகின்ற தலைமுறைகள் வாழ்த்தும் வண்ணமாய்
திருவெனத் தமிழினை கணினியில் புகுத்திய
அரும்பெரும் கோபியை அன்போடு நாமென்றும்
பெருமைப் படுத்திட பாடுவோம் அவர்புகழை ----4
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (25-May-21, 5:16 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 35

மேலே