வானவில்
வானவில்லே!
இறைவனின்
வண்ணத்தூரிகையே!
உன்னைக் கொண்டுதான்
மலர்களுக்கும், மலைகளுக்கும்
மரங்களுக்கும், இறைவன்
வர்ணம் தீட்டினானோ?
ஏதாவது யுத்தம்
நடக்கிறதா என்ன?
வானம் உன்னைத் தூதனாக
அனுப்பி இருக்கிறதே பூமிக்கு!
மழை வேண்டும் என்று
காத்திருக்கிறோம் நாங்கள்
மழை விடட்டும் என்று
காத்திருக்கின்றாய் நீ!
வாகனங்கள் ஓடாத
அந்த பாலத்தின் மீது வானம்
பூமிக்கு எதையோ அனுப்ப
எண்ணுகிறது போலும்...
வானமே நீ! வில்லை
அனுப்பி பிரயோஜனமில்லை,
மன்மதனிடம் அம்பை யாசித்து
அனுப்பி வை! அப்போதுதான்
பூமி உன்னை காதலிக்கும்..
_________/_____________________