பெண்மையின் நிழல்
காதலியைத் பின்தொடரும்
காதலனைப்போல், என்னைப்
பின்தொடரும் என் நிழல்...
நான்உட்காரும்போது உட்காரும்,
நான் உண்ணும்போது உண்ணும்,
இரவு சூரியனை விழுங்கி விட்டு
நிலவை உமிழும் நேரம்,
என்னைவிட்டு ஓடிமறைந்துவிடும்...
என்னைப் போலவே அதுவும்
ஆனால் எனக்குள்ள வலியும்,
வேதனையும், அதற்கில்லை...
பூத்து மலரும் பெண்மையின்
வேதனையோ ,பேறுகால
பிரசவ வேதனையோ அதற்கில்லை..
ஒன்றில் மட்டும் வித்தியாசமில்லை,
தான் என்று பாராத
தன்னலமற்ற சேவையில்
தாய்மை உணர்வில் மட்டும்
என்னைப் போலவே அதுவும்...
_____________________________