நன்றியுள்ள ஜீவன்

“பள்ளியில் இருந்து வீடு திரும்பும் சுஜித் வரும் வழியில் தெருவில்
இருக்கும் நாய் குட்டி ஓன்றை கையில் தாங்கி காெண்டு வந்தான்.”
“அம்மா நான் வீட்டுக்கு வந்துட்டேன்”
வந்துட்டியா வா உனக்காக தோசை சுட்டு வச்சிருக்கேன் வந்து
சாப்பிடு என்று சொன்னப்படியே சுஜித்தின் அம்மா அமுதா, சுஜித் கையில்
உள்ள நாய் குட்டியைப் பார்த்தாள்.
அம்மா, “எதுக்கு இந்த நாய்க்குட்டிய எடுத்துட்டு வந்த அதாேட
அம்மா இந்த குட்டிய தேடும்ல”.
“இல்ல அம்மா இந்த குட்டி நாய் அவங்க இடத்துல இருந்து எங்க
பள்ளிக்கு தனியா வந்திடுச்சி பாவம் அதனாலதான் கொண்டு வந்தேன்”
என்றான்.
சுஜித் அந்த நாய் குட்டிற்கு “மணி” என்று பெயர் வைத்தான்.
அம்மா மணிக்கு பால் கொடுங்க.
“அதெல்லாம் இல்ல நீ இந்த நாயை கொண்டு போ இது வீட்ல இருக்க
கூடாது. உங்க அப்பா வரட்டும் இரு” என்று அமுதா சொல்ல அப்பா உள்ள
வந்தார்.
“சுஜித் உனக்கு பழம் வாங்கிட்டு வந்திருக்க வா சாப்பிடலாம்”
என்று சுஜித்தின் அப்பா குமார் அழைத்தார்.
அமுதா உடனே பாருங்க இந்த நாய்க்குட்டிய எடுத்துட்டு வந்திருக்கான்
என்று சண்டை வலிக்க தொடங்கினாள்.
“அப்பா மணி இங்கையே இருக்கட்டும் என சுஜித் கேட்க”, குழந்தை
ஆசப்பட்டு கொண்டு வந்திருக்கான் அதனால் மணி இங்கையே
இருக்கட்டும் என்றார் குமார். எப்படினா போங்கனு அமுதா கத்திட்டு சென்றாள்.
சுஜித் மறுநாள் மகிழ்ச்சியாக மணியுடன் விளையாடினான். அதுக்கு
பால், சாப்பாடு எல்லாம் இவனே கொடுத்தான்.
அப்பொழுது அமுதா தோட்டத்துல துணி காயப் போட்டுட்டு இருந்தால் அப்போ அங்க பாம்பு
ஒன்று அவளிடம் வந்தது அதை பார்த்த மணி அமுதாவிடம் சென்று
குறைத்து கொண்டு பாம்பு வரும் இடத்தை பார்த்தது. மணி குறைப்பதை
பார்த்த அமுதா, பாம்பு வருவதை கண்டு வெளியே சென்று “பாம்பு! பாம்பு!”
என கத்த அங்க உள்ளவர்கள் பாம்பு விரட்ட கொம்பு எடுத்துக்கொண்டு
வந்தனர்.
மணி அந்த பாம்பை நோக்கி குறைக்க பாம்பு மணியை நோக்கி வந்தது.
மணியை நோக்கி வந்த பாம்பு அங்க ஆட்கள் வந்ததனால் அங்க
இருந்த பொந்துக்குள் ஓடி விட்டது.
அம்மா “உங்களுக்கு ஒன்னும் இல்லையே” என்று பயந்தவாறு
அம்மாவை அனைத்துக் கொண்டான் சுஜித்.
அமுதா, மணி தன் உயிரை காப்பாற்றியதை எண்ணி மணியை சிரித்துக்
கொண்டே தூக்கினாள். அமுதா மணியை தன் இரண்டாம் பிள்ளையாகவே
நினைத்து ஆசையாக வளர்த்தாள். அமுதா மணியை ஏற்றுக் கொண்டதால்
சுஜித் மகிழ்ச்சி அடைந்தான்.

எழுதியவர் : சுஜித் (27-May-21, 11:53 pm)
பார்வை : 161

மேலே