நினைவில் நீயடி
உன்னை பற்றி ஏதாவது எழுத வேண்டும் என்று பேனாவில் மை நிரப்பி சிந்தனையை திறந்து வைத்து காத்திருந்தேன்!
நேரம் கடந்தது, உன் நினைவுகளும் மலர்ந்தது!
காலமும் கடந்தது, கனவுகளும் கனிந்தது!
வின்வெளியின் உள்ள கருதுளைக்குள் உன் ஞாபகம் மட்டும் எனக்குள் கடந்தது!
சிந்தையில் நீ நிரம்பியதால் சித்திரம் உன்னை பற்றி காவியம் தீட்ட வர்னனையில் வார்த்தை கிடைக்கவில்லை!
நீ என்னை ஆக்கிரமைத்தால் எழுத வழியின்றி என் பேனாவை முடி வைத்து உன் கனவை சுமந்து கொண்டு காத்திருக்கிறேன்!