நண்பன் எழுதவைத்த தனிமை

நண்பன் எழுதவைத்த தனிமை

எதற்கு வேண்டும் தனிமை
எழுதவைத்தது நண்பன் அனுப்பிய
புலர்ந்த பொழுதின் நிழல்படம்
புழுவாய் துடித்தது மனம்
புரிந்து கொண்டேன்
புகட்டும் இயற்கையின் பாடம்
புதியது இல்லை தனிமை
புரியவில்லை பலருக்கு
பிரிவின் கொடுமை
உடன் பிறந்தோர் பரிதாபப்படாமல் இருக்க
நீ கடைபிடிக்க வேண்டும் தனிமை

விளங்கிடவேண்டும் உனக்கு
விலகிச் செல்ல வில்லை என்றால்
ஏது சமூக இடைவெளி

விடியும் பொழுது உன் முடிவைத் தொடவேண்டாம்
விலகிச்செல்லும் இருள்,
வானத்தில் வண்ண ஜாலம்
விடியும் பொழுது,
விடைபெரும் ஒளி,
விடைதெரியாது விலகிப்போகும் தனிமனிதன் ,

வியாபாரத்தைத்தேடி வெறுத்து உட்கார்ந்து இருக்கும்
ஒருமனிதன்.
வேடிக்கை பார்க்கும் அமர்ந்தே தெரு நாய்.
தனிமை இடைவெளியை காக்கும் காகம்.
தனியாக தொங்கும் மின்கம்பி,
தடுத்து விளையாடும் விளக்கு ஒளி
விழுந்த நிழல்
விரிச்சோடிகிடக்கும் வீதி,
விதியின் விரட்டல்,
வீடுகளின் தனிமை,
எழுத்துப் பலகை எழுதாது உலகை, எழுத்துப்பலகை
எச்சரிக்கும் உலகை.
மரங்களின் உறக்கம்
மயான நிசப்தம்.
உயர்ந்த கோபுரமாய் நிற்கும்
தனிமையில் நீர்தொட்டி
உறைக்கும் எல்லம் தனிமையின் பெருமையை.
ஓடதா சைக்கிள்
முடக்கப்பட்ட வாழ்க்கை
முழுதாய் கடைபிடிக்கும் விடியல் தந்த முடக்கம்
முடிவாய் வேண்டும் இப்போது.

இயற்கை தரும் பாடம்
சமூக இடைவெளி சாவை தவிக்கும் புதுமொழி.

கொரோனாவிடம் இருந்து உன்னை மட்டும் அல்ல
உலகையும் காக்க வேண்டும் தனிமை

முத்துவேழப்பன் அ

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (31-May-21, 10:16 pm)
பார்வை : 179

மேலே