கடல் நீர் - இதுவுமது - கலி விருத்தம்

கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12 எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு
சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று
ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

உடற்க டுப்புட னுற்றெழு சோணிதம்
நடுக்கு வாதமு நாப்பிடிப் போடுபல்
இடுக்கி ரத்தமூ னிற்று விழுவதுந்
துடுக்க தாஞ்சன்னி தோடமு மோடுமே 53

- பதார்த்த குண சிந்தாமணி

ஒரு வித மகோதரம், பெருநோய், உடல் குடைச்சல், இரத்த சூலை, குட்டம், வாத குன்மம், உதிரவாதம், மண்ணீரல் நோய், நீராமைக் கட்டி, பெருவயிறு இவற்றை நீக்கும் .

இந்நீரைக் காய்ச்சியுண்டால் வாத குன்மம், குடல் நோய், மலக்கட்டு, நீர்க்கட்டு, அதிவுழைப்பால் வரும் நோய்கள், உடற்கடுப்பு, சோணித வாதம், நடுக்கு வாதம், நாக்குப் பிடிப்பு, பல்லிடுக்கில் இரத்தம் வருதல்,
பல்விழுதல், சன்னி தோடம் இவைகள் நீங்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-May-21, 10:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 91

மேலே