காதலிக்கு ஓர் கடிதம்
உனக்காக ஓர் கடிதம்
காவியம் போல்
அனுப்பி வைத்தேன்...!
கடிதம் அனுப்பியவன்
என்ன எழுதியிருப்பான்
என யோசிக்காமல்
நீ வாசிக்க மறந்தாய்...!
நானோ அனுப்பியதை
ஏன் வாசிக்கவில்லை
என யோசித்து யோசித்து
சுவாசிக்க மறந்தாலும்
நீ வாசிக்க வேண்டுமென
யாசிக்க மறக்கவில்லை...!
தாசிக்கும் தயவுண்டு
காசிக்கு ச்சென்றாலே
எனக்கோ
தொலைபேசிக்கும்
தயவில்லை
காதல் பேசினேன்
என்பதாலே...!
உனை நேசிக்கும் எனக்கு
பேசிக்க வழியுமில்லை
எனவே யோசிக்க
வேண்டாமென... மீண்டும்
உனக்காக ஓர் கடிதம்
காவியம் போல்
அனுப்பி வைத்தேன்
நீ வாசிக்க வேண்டுமென
யாசிக்க மறக்காமல்...!