தாஜ்மகால்

முதன் முறையாக
உன்னை பார்த்ததும் மௌனமாகி போன என் மொழிகள்!

வெண் பஞ்சு மேகம் கொண்டு உன்னை செய்தவன் யாரோ!

பால் வண்ணம் கொண்டு பளிங்கால் மின்னுகிறாய்!

யமுனை நதிகரையில் அமர்ந்து காதல் தவம் செய்கிறாய்!

உன்னை கண்டதும் பனியாய் உறைந்து போனது என் மனசு!

வர்ணிக்க வார்த்தைகள் இன்றி ஊமையாகி போனது என் இதழ்கள்!

பார்த்து,பார்த்து ரசித்துக்கொண்டே நேரம் கழிவது அறியாமல் திகைப்புடன் அமர்ந்திருக்கிறேன்!
உன் அருகில் இன்று!

எழுதியவர் : சுதாவி (1-Jun-21, 5:55 pm)
Tanglish : thajmagaal
பார்வை : 184

மேலே