இரவெல்லாம் என் விழியோரம் நனைகிறது 555

***இரவெல்லாம் என் விழியோரம் நனைகிறது 555 ***


ப்ரியமானவளே...


நம் உயிரில் கலந்த உறவுக்கு
வைத்துவிட்டாய் முற்று புள்ளி...

உன் வீட்டு வாசலில்
மாக்கோலத்திற்கு வைப்பது போல...

நம்
காதல் பூகோளத்திற்கு...

என் உள்ளம் மட்டும் உன் நினைவில்
முன்னேறிக்கொண்டே செல்லுதடி...

நாம் சேர்ந்திருந்த
நாட்களை நினைத்து...

ஏன் என்னை மறந்தாய்
இப்போதுவரை தெரியவில்லை...

யோசிக்கிறேன்
நீ தேடிய காரணத்தை...

இரவெல்லாம் என்
விழியோரம் நனைகிறது...

பொன்னான
உன் நினைவுகள்...

எனக்கு கொடுத்த
பிரிவில் உணர்கிறேன்...

நான் தவறவிட்ட ஒவ்வொரு
நொடிகளின் மதிப்பு என்னவென்று...

இரவில் உலாவரும் வெண்ணிலா
என்னை கேலி செய்கிறது...

இத்தனை நாள் என்னை
ஏன் ரசிக்கவில்லை என்று...

முற்பொழுதும் உன்
சிந்தனையில் இருந்த நான்...

உன்னையின்றி வேறொன்றை
ரசிக்க தெரியவில்லை எனக்கு...

உன்னை
மறக்க வேண்டுமெனில்...

பூ உலகினை நான் முதலில்
ரசிக்க வேண்டும்...

உன்
நினைவில்லாமல் நான்.....


***முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (1-Jun-21, 9:26 pm)
பார்வை : 1774

மேலே