96 என் பாதசுவடுகள் 👣

மண்ணு ஊட்டுல
தென்னங்கீத்து காத்துல!
எரானம் ஊட்டுல இறங்கி வந்த
மழைத்துளி!
ஈரக் காத்துதான்!
நீரு ஊத்துதான்!
இடி மின்னல் சத்தமிட
பயத்துல நாங்களும் அம்மாவ கட்டி அணைக்க
அம்மா அர்ஜுனா! அர்ஜுனா! சொல்ல
தவளைய பாம்பு விழுங்க
பலத்த காத்து கூறைய மோத
சுற்றி அடைச்ச கீத்தெல்லாம் பறந்துப் போச்சி
துணியும் நனைஞ்சி போச்சி
உடம்பு உறைஞ்சி போச்சி
விடிஞ்சி போச்சி! தூக்கம் போச்சி
தெருவெல்லாம் மரம் விழுந்துப்போச்சி!
மழையும் நின்னுப் போச்சி
அள்ளி ஊத்தினமே
வீடு புகுந்த மழைத் தண்ணிய!
ஊதம் வாங்காத ஊட்டுக்குள்ள
உசுரு ஊஞ்சலாட வயிறு பசியில வாட
சோத்து குண்டான உருட்ட
கெட்டுப் போச்சி! சோறு கெட்டுப் போச்சி.
ஈரத்துணி காய போட்டு
தண்ணி குடிச்சி வயித்த நெரப்பி
நேரம் போச்சி சூரிய எட்டி பாத்தாச்சி
ஊடும் காய
மண்ணு தரையில சாணம் மெழுகி!
அருசி மாவு கோலம் போட்டு
சாமி எறும்புக்கும் உணவு வச்சோம்!
ஆடு மாடு வெளிய கட்டி
மூடி வச்ச விரகெடுத்து அடுப்புல தீய மூட்டி
சோறு வச்சோம்! குழம்பும் வச்சோம்
வயிறு நிரஞ்சதும் மிச்சத்த
நாயிக்கும் பூனைக்கும் வச்சோம்
அந்த இரவு தா
நொந்த இரவு தா
இருந்தாலும் மீண்டு வருமா?
மீண்டும் வருமா? மழலையாக
நான் ர.ஸ்ரீராம் ரவிக்குமார்🍂 .......

எழுதியவர் : ர.ஸ்ரீராம் ரவிக்குமார் (5-Jun-21, 12:51 pm)
பார்வை : 354

மேலே