அனாமிகா

அவள் பெயர் அனாமிகா. சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு படித்து இந்த அலுவலகத்தில் வேலைக்கு வந்தாள். முப்பதுகளிலும் அவள்
முழுநிலவாய் மிளிர்ந்தாள்
தேனீ போன்று சுறுசுறுப்புடனும்
பிறருக்கு உதவும் குணத்துடனும்
வேலை செய்யும் துறையில்
தனித்தன்மையுடன் ஒளிர்நதாள்.
தலைமையதிகாரி கொடுக்கும்
வேலைகளை மறுப்பினறி செய்வதனால்
தலைமையதிகாரியின் நன்மதிப்பை
பெற்றாள். அதன் காரணமாக சில சலுகைகள் பெற்றாள்சக ஆண் தோழர்களிடமும் சகஜமாக பழகினாள்.அவளது உயர்வு பொறுக்காமல் சகபெண் தோழிகள்
அவளை வெறுக்க தொடங்கினர்
அவளுடன் போட்டியிட தொடங்கினர். அனாமிகா எதை கண்டும் தளரவில்லை
ஆள் பாதி ஆடை பாதி எனவே அழகாக நேர்த்தியுடன் ஆடை அணிவதால் அனைவரையும் கவர்கிறாள் என்றனர்
அவள் கள்ளம் கபடமில்லாமல் பழகுவதை
தவறாக சித்தரித்தனர். தலைமையதிகாரி யை தன் கைக்குள் போட்டுக் கொண்டு காரியம் சாதிக்கிறாள் என்று புறம் பேசினர். அனாமிகாவோ இவை எதையும்
பொருட்படுத்தாமல் தம் வேலைகளில் கவனம் செலுத்துவாள். இறைவனிடம் மட்டும் முறையிடுவாள். தன் பெண்ணினம் தன்னை தவறாக பேசுவது கண்டு வருந்துவாள். ஓர் நாள் உயரதிகாரி
அங்கே ஆய்வுக்கு வந்த போது அனாமிகா வின் வேலையின் நேர்த்தியையும் திறமையையும் அனைவர் முன்னிலையில் பாராட்டி பதவி உயர்வும் அளித்தார். அதை பார்த்த சக தோழிகள் . நாய் வாலை நிமிர்த்தத முடியாது என்பது போல் அப்போதும் அவளை குறை கூறிக்கொண்டே இருந்தனர்.வந்த உயரதிகாரியையும் தன் அழகிலும் பேச்சிலும் மயக்கி விட்டாள் அனாமிகாவோ எதையும் பொருட்படுத்தாது தன் வழியில் முன்னேறி உயரதிகாரி ஆகினாள். ஓர் நாள் அதே அலுவலகத்திற்கு ஆய்வுக்கு வந்தாள். குறை கூறியவர்கள் வாயடைத்து போனார்கள். அவளை முன்னர் தவறாக பேசியதற்கு பழி வாங்குவாளோ என பயந்தனர். அனாமிகாவோ யாரிடமும் முகம்கோணாமல் பணியில் உள்ள தவறுகளை மட்டும் சுட்டிக் காட்டி விட்டு எவ்விததசலனமுமின்றி தெளிந்த நீரோடை போல விடைபெற்று தன்வாகனத்தில் ஏறிச்சென்றாள்.அனாமிகாவை தவறாக பேசயவர்கள் அவளின் பெருந்தன்மை கண்டு வெட்கத்தில் தலைகுனிந்தனர்.

.

எழுதியவர் : ஜோதிமோகன் (7-Jun-21, 9:58 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
பார்வை : 165

மேலே