என்னுள்ளே ஐந்தருவியாய்
தென்றல் இளம்காற்றி னில்மிதந்து வந்திடும்
மென்தேவா ரப்பாட்டில் நெஞ்சம் மகிழுது
நன்குற்றா லக்குறவஞ் சிக்கவிரா யர்பாட்டில்
என்னுள்ளம் துள்ளு தடா !
---ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
தென்றல் இளம்காற்றி னில்மிதந்து வந்திடும்
மென்தேவா ரப்பாட் டினில்மகிழ்ந்து - பொன்னெழில்
நன்குற்றா லக்குறவஞ் சிக்கவிரா யர்பாட்டில்
என்னுள்ளம் துள்ளு தடா
-----ஒரு விகற்ப நேரிசை வெண்பா
தென்றல் இளம்காற்றி னில்மிதந்து வந்திடும்
மென்தேவா ரப்பாட்டில் நெஞ்சம் மகிழுது
நன்குற்றா லக்குறவஞ் சிக்கவிரா யர்பாட்டில்
என்னுள்ளம் துள்ளுது அஞ்செழுத்து அந்நாமம்
என்னுள்ளே ஐந்தருவி யாய் !
---ஒரு விகற்ப பஃறொடை வெண்பா