நிலவை உன் முகத்தில் வைத்தான்

நீலத்தை வானில் வைத்த இறைவன்
பூமியில் நீலத்தை கடலில் வைத்தான்
நிலவை வானில் வைத்த இறைவன்
பூமியில் நிலவை உன் முகத்தில் வைத்தான்
வான்நீலமும் உன்னில் இடம்பெறவேண்டும் என்றது
உன் விழிகளில் சிறிது அதை தீட்டி வைத்தான்
நீலக்கடல் முத்துக்களும் இடச் சலுகை கோரிக்கை வைத்தபோது
உன் செவ்விதழ்களில் கோர்த்து வைத்தான்
இயற்கையே பெண் வடிவு ஆனதில் படைத்த இறைவனும் மகிழ்ந்து போனான்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jun-21, 7:11 pm)
பார்வை : 258

மேலே