காதலடி நீ எனக்கு காந்தமாடி நான் உனக்கு

காதலடி நீ எனக்கு;
காந்தமாடி நான் உனக்கு.
கீதமடி நீயெனக்கு;
கீழ்வானமே நான் உனக்கு.
பாயும் நதி நீ எனக்கு;
பருவமழை நான் உனக்கு.
பயிலும் பைங்கிளி நீ எனக்கு;
பனித்துளி தான் நான் உனக்கு.
வீசும் தென்றல் உனக்கு;
வந்த வசந்தமடி நீ எனக்கு.

பூத்த மலர் நீ எனக்கு;
மொய்த்த வண்டு நானுனக்கு.

வெண்நிலவே நீ எனக்கு;
வெண்பனி தான் நான் உனக்கு.

கண்மணியே நீ எனக்கு;
கண் இமைதான் நான் உனக்கு.
வான்மதியே நீ எனக்கு;
வந்தணைத்த மேகம் நான் உனக்கு.

பேசும் சித்திரமே நீ எனக்கு;
வீசும் சாமரமே நான் உனக்கு.
வீசும் மணமே நீ எனக்கு;
வந்துறங்கும் இரவே
நானுனக்கு.
பாடும் பைங்குயிலே நீ எனக்கு;
படரும் கொடி நானுனக்கு.

ஆசை அமுதே நீ எனக்கு;
அள்ளிப் பருகும் தேறல் நான் உனக்கு.
நாத மனடி நீ எனக்கு;
நறுமனமே நான் உனக்கு.

வீரமடி நீ எனக்கு;
விரத தாபமடி நான் உனக்கு.

மீட்டும் வீணையடி நீ எனக்கு;
மீழாத சொர்க்கமடி நான் உனக்கு.

பசியடி நீ எனக்கு;
புசிக்கும் உணவு நான் உனக்கு.

பேரழகு நீ எனக்கு;
பார்க்கும் விழி நானுனக்கு.

ஒளிரும் வெளிச்சமடி நீ எனக்கு;
ஓடி வரும் நிழலடி நானுனக்கு.

நவரசம் நீ எனக்கு;
பருகும் பழரசமே நான் உனக்கு.

விடிவெள்ளி நீ எனக்கு;
விடியும் பொழுது நான் உனக்கு.
விரட்டிவரும் அலையே நீ எனக்கு;
விரைந்தணைக்கும் மணற்கரை நான் உனக்கு.

செல்லமடி நீ எனக்கு;
செந்தூரம் நான் உனக்கு.

செந்தமிழின் குழைவே நீ எனக்கு;
செல்வக் குவியலே நான் உனக்கு.
வர்ணமடி நீ எனக்கு;
வானவில் நான் எனக்கு.

ரசிகையே நீ எனக்கு
ரகசியம் தான் நான் உனக்கு

ரசனையே நீ எனக்கு
ரட்சகன்’ நான் உனக்கு

தாமரையடி நீ எனக்கு;
தடாகம் நான் உனக்கு.

தாரகையே நீ எனக்கு;
தடுமாற்றமே நான் உனக்கு.

சருக்குமரமே நீ எனக்கு;
சாரணியே நான் எனக்கு.

ஊரணியே நீ எனக்கு;
ஊரும் ஊற்றே நான் உனக்கு.

ஊறள் நீ எனக்கு;
ஓரசும் உடம்பே நானுனக்கு;
ஆடிவரும் நதி நீ எனக்கு.
அடித்து வரும் நுரை நான் உனக்கு.

வேட்கையடி நீ எனக்கு;
வெட்கமே நான் உனக்கு.

கடல் அலைபோல்,
திரிந்து வாழுவோம்;
காதல் மொழி பேசி,
காயும் நிலவை ,
வாடகைக்கு வாங்குவோம்;
காதல் வானில் மிதக்க.

காட்டுத்தீயாய் உன்னை நான் பிடித்து;
காதல் போதையை தனிப்பதற்கு,
உன் கருவியியை தூது அனுப்பு.

மீனப்போல நீயும் நானும்,
விண்ணில்தான் விடிய விடிய நீந்திக்கிடப்போம்.
மீலாத உலகில்,
மேஞ்சிதான் மெல்ல மெல்லா நடப்போம்,

மானாட்டம் ஓடி ஓடி;
மாலைப்பொழுதைத் தொட்டுவருவோம்.
மதிமுகத்தை,
விண்ணில் பதித்துவருவோம்.

நீல் வானில் தங்கி இருந்து,
நித்திரையை கழித்து வருவோம்.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (14-Jun-21, 9:29 pm)
பார்வை : 282

மேலே