ஆரோக்கியமான வாழ்க்கை குறிப்புகள்
நாம் காணும் பலர் ஆரோக்கியமானவர்கள்
எப்போது கேட்டாலும் fineன்னு கூறுவார்கள்!
கால்கள் வலுவுடன் இருப்பதாகக் கூறுவார்
கொஞ்ச தூரம் நடந்தாலோ, ஒரே வலியாம்!
கால் முட்டி நல்ல கெட்டி என்று ஜம்பமடிப்பார் மாடி ஏறி இறங்குவது மட்டும் கஷ்டம் என்பார்
இடுப்பு மிகவும் நன்றாகவே இருக்கிறதாம்
குனிந்து வேலை செய்தால்தான் வலியாம்!
வயிறு எப்போதும் கலகலன்னு இருக்குதாம்
வாரத்தில் மூன்று நாள் மட்டும் அஜீரணமாம்
இதயம், நுரையீரல்கள் திடமாக உள்ளதாம்
அவ்வப்போது மூச்சு மட்டும் முட்டுகிறதாம்!
பறவை போல கழுத்து எங்கும் திரும்புமாம் கூப்டா உடனே திரும்பிபார்க்க முடியாதாம்!
உண்மை பற்கள் 16ம், அவ்வளவு உறுதியாம்
கடலை பர்பி பொடி பண்ணி சாப்பிடுவாராம்
தொண்டை எப்போதும் கணீர்னு இருக்காம்
சூடாக ஜில்லுன்னு கொடுத்தா வேணாமாம்
மூக்கு நல்ல ரசனையா வாசனை உறியுதாம்
தூசு இருந்தா மட்டும் தும்மலும் கூட வருதாம்
கண்கள் இரண்டு, கண்ணாடியா மிளிருதாம்
கண்ணாடி எடுத்தா எதிர்ல யார்,தெரியாதாம்
காதுகள் ரெண்டும் , மெத்துன்னு இருக்காம்
டமாரம் அடிச்சா 5 நிமிடம் கழித்து கேட்குமாம்
தலைநகர் தலை, 24 மணியும் சுறுசுறுப்பாம்
யோசனை பண்ணினா லேசா வலிக்குமாம்!
உள்ளே மூளை எல்லாவற்றிலும் சிறந்ததாம்
கோவிட்க்கு முன் நடந்தவை மறந்துவிட்டதாம்!
ஆரோக்கிய சேதுவில் இவருடைய பெயர் இரும்பால் பெரிதாக பாதிக்க , மன்னிக்கவும்,பதிக்கப் பட்டிருக்காம்!
நாமும் இவருடைய ஆரோக்கிய வாழ்வை பின்பற்றி நம் உடலை கோணி, இல்லை,இல்லை, பேணி காப்போம்...
ஆனந்த ராம்