லாக் டவுன் நேரத்தை நல்ல முறையில் எப்படி செலவழிப்பது

1. உடல் பயிற்சி மிகவும் இன்றியமையாத ஒன்று. இதை அன்றாடம் செய்வது மிகவும் நன்று. இதற்காக கொஞ்சம் கூடுதல் நேரம் கொடுப்பது என்று? இன்று.

2. தியானம் மனதை அமைதிப் படுத்தும் சிறந்த வழி. செய்யாதவர்கள் தியானத்தை துவக்கலாம். செய்பவர்கள் இதற்காக கூடுதல் நேரத்தைக் ஒதுக்கலாம். அல்லாடும் மனதின் கிளேசங்களை கழிக்கலாம். மகிழ்ச்சியைப் பெருக்கலாம். மேன்மையான வாழ்விற்கு வழி வகுக்கலாம். அதன் மூலம் மன அமைதியை கூட்டலாம்.

3. நேரத்தை நாம் கடத்த வேண்டும். நேரம் நம்மை கடத்தக் கூடாது. இதற்கு மிகச் சிறந்த வழி நமக்கு சந்தோஷம், திருப்தியைத் தரும் செயல்களைச் செய்வது. இது பொழுது போக்காகவும் இருக்கலாம். சித்திரம், கவிதை , பாடுதல், கற்பனை சக்தியைத் தூண்டி விடுதல், புதிர்கள், படித்தல் etc.

4. இயற்கையை ரசித்தல். விடிகாலை ஒளிரும் நட்சத்திரங்களைக் ரசித்தல், கூவிக் கொண்டு பறக்கும் பறவைகள், ஜிவ்வென்று எழும் ஆரஞ்சு பந்து. மரம் செடி கொடிகள்; இரவில் கண் குளிர்காய அருமை நிலவு.

5. வீட்டை மேலும் சுத்தமாக வைத்திருக்க நல்ல வாய்ப்பு. பழைய சாமான்களயும், காகிதங்களையும் களைந்து எறியலாம். மனதில் துருப்பிடித்து இருக்கும் பழைய அல்பமான கோப தாபங்களையும் சேர்த்து வெளியே தள்ளி விடுங்க. புதிய மகிழ்ச்சி எப்படி ஊற்றெடுத்து ஒடும் என்று பாருங்க!

6. போட்டோ ஆல்பங்களை பார்த்து, பழைய இனிமை சம்பவங்களை நினைவு கூறலாம். உள்ளவர்கள், போனவர்கள், மறந்தவர்கள் எல்லோரையும் இதில் பார்க்கலாம். (போட்டோக்கள் கண்ணுக்குத் தெரிந்தால்)

7. பழைய கடிதங்கள், நாம் கைபட எழுதிய டைரிகள், மிகப் பழைய குறிப்புகளை மீண்டும் பார்த்து ரசிக்கலாம். (ஒரு வேளை எழுதியிருந்தால், பொட்டியில் இருந்தால்)

8. ஏழு விஷயங்கள் சொல்லியாகிவிட்டது. எட்டாவது என்ன என்று என் மனதுக்கு எட்டவில்லை. உங்கள் அழகான அறிவை உபயோகித்து, கொஞ்சம் சொல்லுங்களேன், எட்டாத, எட்டாவது காரியம் என்ன செய்யலாம் என்று. தட்டாமல் செய்வோம்.


ஆனந்த ராம்

பின் குறிப்பு:

யதேச்சையாக, 1978-1984 வரை நான் கிறுக்கிய எழுத்துக்களை கிட்டதட்ட 30 வருடங்கள் கழித்து, கஷ்டப் பட்டுப் படித்து, பரவசம் மட்டும் அல்ல நவரசமும் அடைந்தேன். இவை என்னிடம் உள்ளது என்ற நினைவே எனக்கு இல்லை. என் அந்த காலத்து நினைவுகள், என் மனநிலைகள் எல்லாம் திரைப்படம் போல கண்களில் ஓடியது

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (15-Jun-21, 10:18 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 71

சிறந்த கட்டுரைகள்

மேலே