தவறான புரிதல்
கணவன்
குடிக்கிறான்...என்றும்...
குடியை விட
மருந்து தாருங்கள்...
என்று கூறி....
வந்தாள் ஒருத்தி.
அவன் குடியை
விட வேண்டுமென்றால் ...
"குடிக்கும் போது
நீயும்... ஒரு மடக்குக்
கேளு...
பயந்து விட்டிடுவான்"...என்றேன்.
மாதம் இரண்டாகியது...
அவள் பதில் தரவில்லை...
ஆளும் வரவில்லை.....
ஆக...
கணவன்...
குடியிலிருந்து...
மீண்டிருப்பான்.... என
நினைத்திருந்தேன்
மகிழ்ச்சியாக ...
இன்று
கடை திறந்திருந்தபோது....
எடுக்கப்பட்ட புகைப்படத்தில்
அவளும் ... கும்பலில்
இருந்தாள் ...
அவளுக்கு...
தொலைபேசியில்
அழைத்து...
நீ தானா அது ?....
என்றேன்.
ஆம்... ஐயா...
நான் தான் அது
என்றாள் ...
ஏன்?...
இந்த நிலை?
என்றேன் ...
நீங்கள் கூறிய
அறிவுரைப்படி...
அவர் குடிக்கும் போது....
நானும் கொஞ்சம்
கேட்டேன்...
பயப்படுவார் என
நினைத்தேன் ...
ஆனால் ...
ஆனால் ...
எனக்கும்
அது பழக்கமாகிவிட்டது ....
இன்று
இருவரும்
தொடர்கிறோம்...
என்றாள் ...
சில நேரங்களில்
மருத்துவ அறிவுரை
தவறாகப் புரிந்து
கொள்ளப்படுகிறது.
மரு.ப.ஆதம் சேக் அலி
(கற்பனையே)