காதல் சொல்லும் வேலை 2

பறந்து சென்ற பச்சைக்கிளியை தேடிபிடித்தேன் தேர்திருவிழாவில்
அறியாததை காணும் குழந்தை
அச்சப்படுவதைபோல அங்கிருந்து சென்றாள்

என்மனம் பொங்கியதில் புத்தரிசி பொங்க
பொங்கலோ என்றாள் புதுபானை கிண்டி
காத்திருந்த தனிமைக்கு வாய்த்தது வசதியாக...கல்லூரி திறப்பு

காதலை திறக்க காலம் கனிந்ததுயென
நான்எண்ணிட நந்தியாய் வந்தான் நந்து
என்னும் நந்தகோபால்... நொந்துபோனேன்
நான் அவளது மாமன் மகனால்

இடைவிடாத லூட்டியும் குறைவிலா ஜொள்
கொண்டு லொள்ளு பண்ணினான் லூசு
பாஸ்யென அவன்பர்சை பதம்பார்த்தன
பகல்கொள்ளையர் கூட்டம் பாவைவடிவில்

காதல்சொல்ல இதுவல்ல நேரம் என காத்திருக்கேன் கவலையாக ..ஆனால் அவளோ இங்கிலாந்து ராணி இவளை
கண்டு ஓடியதுபோல பாவித்தாள் பலவிதமாக...

நளிங்குபார்வை கொளும் நடுநெற்றியை
நெளித்து சுளிக்கினாள் எனைகாண...
எனினும் யென்ஏக்கம் எனைவெல்ல
தயக்கமின்றி செல்கிறேன் பாவைஅவள் பாதத்தடம் பற்றி...

என்காதல்மேல் அக்கறை கொண்டு
கனியும்காலம்மேல் நம்பிக்கை கொண்டு...

மீண்டும் வருவேன் மீண்டு...

எழுதியவர் : பாளை பாண்டி (18-Jun-21, 11:07 am)
பார்வை : 111

மேலே